"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப்படுகிறது
கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள மொத்த காய்கறி விற்பனை கடைகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
சென்னையில் கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததால் சந்தை மே மாதம் 5ம் தேதி மூடப்பட்டது. இதையடுத்து தீவிர ஆய்வுக்கு பிறகு சந்தையை மீண்டும் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.
கடைகளை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. கடைகளுக்கு வருவோருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யவும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாரம் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள், இருசக்கர வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments