இந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி அமெரிக்க டாலர் நிதி வழங்கப்படும் - பிரதமர் மோடி
இந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, நிதியுதவியாக 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார உறவு ,சுற்றுலாத்துறை, கல்வி, கலாச்சாரம், போன்றவற்றோடு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் உட்பட, தனித்துவமிக்க இந்திய-இலங்கை இடையேயான உறவு குறித்து மீளாய்வு செய்ததாக பதிவிட்டுள்ளா
தொடர்ந்து, பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போராட, இலங்கை உடனான உறவு மேலும் வலுவாக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Comments