அக்.1 முதல் மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சிக்கு விமான சேவை - ஓமன் இந்திய தூதரகம்
மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 45 விமானங்கள் இயக்கப்படும் என்று ஓமன் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திக் குறிப்பில் ஓமன் நாட்டில் இருந்து இந்தியர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அக்டோபர் 1-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 45 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாகவும், சென்னை, திருச்சி, மும்பை, டெல்லி, கொச்சி, பெங்களூரு, ஐதரபாத், கோழிக்கோடு, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவைகள் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments