நீட் தேர்வு வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு
நீட் தேர்வு வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகளைத் தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய இளநிலைப் படிப்புகளில் சேருவதற்குக் கடந்த 13ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் மூவாயிரத்து 842 மையங்களில் நடைபெற்ற தேர்வை 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர். அந்தத் தேர்வில் வந்திருந்த வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகளைத் தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
www.ntaneet.nic.in என்கிற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்புகளுடன், தேர்வர்கள் தாங்கள் எழுதிய விடைகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாகத் தேசியத் தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments