போதைப் பொருள்களை உட்கொண்டதும் இல்லை, ஊக்குவித்ததும் இல்லை - கரண் ஜோஹர்
போதைப் பொருள்களை உட்கொண்டதும் இல்லை, அதன் பயன்பாட்டை ஊக்குவித்ததும் இல்லை என்று பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டில் கரண் ஜோஹர் இல்லத்தில் நடைபெற்ற விருந்து தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர்கள் சாகித் கபூர், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், வருண் தவான், அர்ஜூன் கபூர், மலைக்கா அரோரா, விக்கி கெளசால் ஆகியோர் உள்ளனர். விருந்தில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் போதைப் பொருளை எடுத்து கொண்டதாக வீடியோவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு விளக்கமளித்து ட்விட்டரில் ஜோஹர் வெளியிட்டுள்ள பதிவில், அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை முகாந்திரமில்லாதவை எனவும், பொய் எனவும் மறுத்துள்ளார்.
— Karan Johar (@karanjohar) September 25, 2020
Comments