இந்தியா - மாலத்தீவுகள் இடையே நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்து முதல் கப்பல் மாலத்தீவு துறைமுகம் சென்றடைந்தது
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுகளுக்கு நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல் கப்பல் குலுதுபுசி துறைமுகத்தைச் சென்றடைந்தது.
இந்தியா - மாலத்தீவுகள் இடையே வணிகத்தொடர்பை வளர்க்கும் வகையில் நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்தை இரு நாட்டு அமைச்சர்களும் கடந்த 21ஆம் தேதி தொடக்கி வைத்தனர்.
தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட கப்பல் கொச்சிக்குச் சென்று அங்கிருந்து புறப்பட்டு மாலத்தீவுகளின் குலுதுபுசி துறைமுகத்தை இன்று சென்றடைந்தது. இந்தக் கப்பல் வரும் 29ஆம் தேதி மாலே துறைமுகத்தைச் சென்றடையும்.
#WATCH The cargo vessel MCP Linz operated by the Shipping Corporation of India (SCI) reached anchorage at the northern Maldivian town of Kulhudhufushi today.
— ANI (@ANI) September 26, 2020
MCP Linz connects Tuticorin and Cochin ports in India with Kulhudhufushi and Male ports in the Maldives. pic.twitter.com/SD8BVzMmLn
Comments