கன்னட திரையுலகை உலுக்கி வரும் போதைப்பொருள் வழக்கு : நடிகை அனுஸ்ரீயிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

0 1819
கன்னட திரையுலகை உலுக்கி வரும் போதைப்பொருள் வழக்கு : நடிகை அனுஸ்ரீயிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

கன்னட திரையுலகை உலுக்கி வரும் போதைப்பொருள் வழக்கில் ஆஜராகியுள்ள நடிகையும், தயாரிப்பாளருமான அனுஸ்ரீயிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 14 பேர் கைதாகியுள்ள நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், நடிகை அனுஸ்ரீ-க்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதையடுத்து மங்களூரு மாவட்டம் பணம்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் ஆஜரான நடிகை அனுஸ்ரீயிடம் 15 பேர் கொண்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments