பிரமோற்சவத்தின் 8-ம் நாளில் சர்வ பூபாள வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 8-ம் நாளான இன்று சர்வ பூபாள வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வழக்கமாக 8-ம் நாளில் நடைபெறும் தேரோட்டம், வீதி உலாக்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக கல்யாண உற்சவ மண்டபத்தில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தம் பாட அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கல்யாண உற்சவம் மண்டபத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.
இன்று இரவு பாயும் குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் அருள் பாலிக்கிறார்.
நேற்று ஒரே நாளில் மட்டும் உண்டியல் காணிக்கையாக 1கோடியே 18லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.
Sarva Bhoopala Vahana Seva on Thursday Evening pic.twitter.com/d6TIUYGyLW
— GoTirupati (@GoTirupati) September 25, 2020
Comments