கொரோனா மைய குளியலறையில் செல்போன்.. கண்டுபிடித்த இளம் பெண்ணால் சிக்கிய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்

0 13769

கன்னியாகுமரியில் கொரானா நோயாளியான இளம் பெண்ணை குளியல் அறையில் செல்போன் மூலம் வீடியோ எடுத்த கம்யூனிஸ்ட் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் கொரானா மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ‘கன்னியாகுமரி மாவட்டம் தமிழக- கேரள எல்லைப் பகுதியான பாறசாலையில் ஸ்ரீ கிருஷ்ணா பார்மசி என்ற கல்லூரியில் கொரானா மையமாக செயல்பட்டு வருகிறது கேரளாவின் செங்கல் பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஷாலு என்பவர் இந்த மையத்தில் கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .

இதே மையத்தில் பாறசாலைரய சேர்ந்த 20 வயது இளம் பெண்ணும் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இந்த இளம் பெண் கொரோனா மையத்தில் உள்ள குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்தபோது , உள்ளே செல்போன் மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் . செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் தான் குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து , செல்போனை எடுத்து கொண்டு போய் சுகாதார துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்

பாறசாலை போலீசார் கொரோனா மையத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த செல்போன் கொரோனா மையத்தில் சிகிச்சையிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஷாலுவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது போலீசார் அவனிடத்தில் விசாரித்தபோது , தனக்கு கொரானா நெகடிவ் சான்று கிடைத்ததால் இன்று வீட்டிற்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தேன். இதனால், பாதிக்ப்பட்ட இளம் பெண்ணை குளிக்கும் காட்சிகளை எடுத்தால் மாட்டி கொள்ள மாட்டோம் என்று எண்ணி செல்போனை குளியலறையில் பொருத்தியதாக வாக்குமூலம் அளித்தான். ஷாலு கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments