'உங்கள் உயிர் என் கையால்தான் போகும்!'- எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளுக்கு மிரட்டல்

0 16302

பவானி அருகே பாரத் ஸ்டேட் வங்கியின் கிளைக்கு தபால் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம்பவானி மேட்டூர் சாலையில் எஸ்.பி.ஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளருக்கு பவானி போஸ்ட் ஆபிஸ்ல் இருந்து போஸ்ட்மேன், மேனேஜரிடம் வந்து தபால் ஒன்றை கொடுத்துள்ளார்.

தபாலை பிரித்து பார்த்த போது, அதில் பவானி ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் மேலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளின் தலை துண்டிக்கப்பேன். கண்டந்துண்டமாக வெட்டி ஆற்றில் வீசப்போகிறேன், வங்கியில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது. உங்கள் உயிர் எப்படி போகும் என்பது என் கையில் உள்ளது. இது மொட்டை கடிதம் அல்ல, நான் மேட்டூர் கார்த்திகேயன் v;dW எழுதப்பட்டு , இரண்டு போன் எண்கள் எழுதப்பட்டு இருந்தது. மேலும் என்னை கண்டுபிடிக்க முயற்சி செய்யவேண்டாம் என்றும் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது. 

இதையடுத்து, கிளை மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் பவானி போலீசார் மோப்பநாய்களுடன் வந்து வங்கியில் பரிசோதனை செய்தனர். வங்கியில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments