ஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்..!
பாடல் வரி இல்லை. இசையொலிகள் இல்லை. ஆனால் இந்த குரலை நாம் ரசிப்பது இதன் ஹம்மிங் எனப்படும் குரலோசையால்....டிஎம்எஸ் பிசுசிலா போன்ற ஜாம்பவான் பாடகர்கள் இந்த ஹம்மிங்கின் அருமை உணர்ந்தவர்கள்.
தங்கள் பாடல்களுக்கு இடையே சரியான இடத்தில் இசையமைப்பாளர் ஒப்புதலுடன் ஹம்மிங்கை புகுத்தி விடுவார்கள். அதில் மிகவும் தேர்ந்த பாடகராக விளங்கினார் எஸ்.பி.பி.
ஹம்மிங் பாடும் போது வரிகள் இல்லாததால் குரலும் ராகமும் மனதில் பதிகிறது. அது ஒரு இசையின் தனி அனுபவமாகவும் மாறுகிறது.
தன் சொந்த குரலில் பாடும் பாட்டிலேயே ஹம்மிங் பாடுவது ஒருவகை என்றால் இன்னொரு பெரிய பாடகர் பாட இரண்டாவது பாடகர் ஹம்மிங் மட்டுமே பாடுவது ஒரு வகை.
எஸ்.பி.பி. இரண்டு வகைகளிலும் ஆற்றலை வெளியிட்டார்.
எஸ்.பி.பியின் தனிக்குரல் பாடல்கள், ஜோடி டூயட் பாடல்கள் மட்டும் அல்ல...அவரது ஹம்மிங் பாடல்களும் என்றும் நினைத்தாலே இனிக்கக்கூடியவை....
Comments