ஹலோ 2020... நீ பறித்துக் கொண்டாலும் எந்த புத்தாண்டிலும் அந்த பாடல் ஒலிக்கும்!

0 7435

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாகாவரம் பெற்ற ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அந்த பாடல்களில் மிக முக்கியமானது சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற இளமை இதோ இதோ... இனிமை இதோ இதோ என்ற பாடல். கடந்த 1982 - ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி முத்துராமனின் இயக்கத்தில் வெளியான சகலகலா வல்லகன் படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தில் இடம் பெற்ற இளமை இதோ இதோ என்ற பாடலும் சாகாவரம் பெற்ற பாடலாக அதன்பிறகு பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கத் தொடங்கியது. கல்லூரி ஆண்டு விழாக்களில் மேடை தோறும் இந்த பாடல் பாடப்பட்டது. படத்தில் நடிகர் கமலஹாசன் நடன மேடைக்கு மோட்டார் சைச்கிளில் வருவார். அதேபோலவே கல்லூரி ஆண்டு விழாக்களில் கமல் போல வேடம் போட்டுக் கொண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து நடனமாடும் அளவுக்கு இந்த பாடல் பிரபலமானது.

கமல்ஹாசனின் ஆட்டமும் எஸ்.பி.பி குரலும் இளையராஜா இசையும் இந்த பாடலுக்கு ரசிகர்களை ஆட்டம் போட வைத்தன. அது மட்டுமல்ல 1982 - ஆம் ஆண்டியிலிருந்து ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் இளமை இதோ பாடல் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் நிறைவடையாது. அது சென்னை மாநகரமாக இருந்தாலும் சரி... தமிழகத்தின் குக்கிராமமாக இருந்தாலும் சரி... புத்தாண்டு தினத்தில் சரியாக இரவு 12 மணிக்கு hallo everybody happy wish youy a new year என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல்தான் ஒலிக்கத் தொடங்கும்.

இந்த புத்தாண்டு தினத்தில் மட்டுமல்ல இனிமேல் பிறக்Fம் எந்த புத்தாண்டு தினத்திலும் இந்த பாடல்தான் நிச்சயமாக ஒலிக்கும். இப்படிப்பட்ட சாகா வரம் படைத்த பாடலை பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை 2020 ஆம் ஆண்டு நம்மிடம் இருந்து பறித்து விடும் என்று யாரும் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டோம். இந்த வருட புத்தாண்டு கொண்டாட்டதிலும் இளமை இதோ பாடல்தான் இரவு 12 மணிக்கு நிச்சயமாக ஒலிக்கும். அப்போது, 2021 ஆம் ஆண்டு பிறந்திருக்கும். விடிவு காலத்தை நோக்கி பயணிக்கத் தொடங்குவோம் என்று நம்புவோம்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments