புதியதாக பொறுப்பேற்றுள்ள ஜப்பான் பிரதமருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி உரையாடல்

0 2242
புதியதாக பொறுப்பேற்றுள்ள ஜப்பான் பிரதமருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி உரையாடல்

புதியதாக பொறுப்பேற்றுள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga)உடன், தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் முறையாக உரையாடினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இருநாடுகளுக்கு இடையேயான உறவானது தற்போது நிலவும் பிராந்திய மற்றும் உலகளாவிய சூழலை எதிர்கொள்ள உதவும் என இருவரும் ஒப்புக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய-ஜப்பான் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளில் மகத்தான முன்னேற்றம் கண்டு இருப்பது தொடர்பாகவும், எதிர்காலத்தில் கூட்டாக சேர்ந்து செயல்பட வேண்டிய வழிமுறைகள்  தொடர்பாகவும் பேசியதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments