யெஸ் வங்கி நிறுவனர் ராணாகபூரின் 127 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அமலாக்கத்துறை முடக்கம்
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் லண்டனில் வாங்கிய 127 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.
யெஸ் வங்கியின் நிறுவனர்களில் ஒருவரான ராணா கபூர், சில நிறுவனங்களுக்கு முறைகேடாக பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாரி வழங்கி, ஆதாயம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்து வாங்கிய அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை கண்டறிந்து முடக்கி வருகிறது.
அந்த வகையில் லண்டனில் 2017 ஆம் ஆண்டு டிஒஐடி கிரியேசன்ஸ் ஜெர்சி லிமிடெட் என்ற பெயரில் 93 கோடி ரூபாய்க்கு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.
Comments