ஹார்லி டேவிட்சன் தயாரிப்பை இந்தியாவில் விற்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் பேச்சு
அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், அதன் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பதற்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து உதிரிப்பாகங்களைக் கொண்டுவந்து டெல்லி அருகே உள்ள தொழிற்சாலையில் அவற்றை ஒன்றிணைத்து இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. பத்தாண்டுகளில் 25 ஆயிரம் வாகனங்களையே விற்றுள்ளதால் வணிக முறையில் காலூன்ற முடியவில்லை.
இதனால் இந்தியாவில் உள்ள ஆலையை மூட ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் தனது தயாரிப்புகளை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பதற்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.
இதேபோல் ஹார்லி டேவிட்சனின் முந்நூறு முதல் அறுநூறு சிசி வரையுள்ள இருசக்கர வாகன மாடல்களில் குறைந்தது ஏதாவது ஒன்றை இந்தியாவில் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கவும் ஹீரோமோட்டாகார்ப் நிறுவனத்துடன் பேச்சு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
Comments