எஸ்பிபி பாடுவதற்கு ஒரு பாடலையாவது எழுத விரும்பிய கவிஞர்கள்

0 4464
எஸ்பிபி பாடுவதற்கு ஒரு பாடலையாவது எழுத விரும்பிய கவிஞர்கள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் திரைப்படப் பாடலான ஆயிரம் நிலவே வா பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன். பின்னர் எஸ்.பி.பி. புகழ் பெற்ற போது உச்சி வகுந்தெடுத்து, பாடும்போது நான் தென்றல் காற்று போன்ற பல இனிய பாடல்களை புலவரின் கைவண்ணத்தில் எஸ்.பி.பி. பாடியிருக்கிறார்.

எஸ்.பி.பி.க்கும் கண்ணதாசனுக்குமான நட்பும் உறவும் அபாரமானது. கவிஞர் எழுதி மெல்லிசை மன்னர் எஸ்.பி.பி. பாடிய பல நூறு பாடல்கள் இன்றும் ரசிகர்கள் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளன.

கண்ணதாசனும் எஸ்.பி.பியின் குரலுக்கேற்ற பாடல் வரிகளை படைத்தார்.

கவிஞர் வாலியுடன் எஸ்.பி.பிக்கு ஏற்பட்ட உறவும் கண்ணதாசன் எஸ்.பி.பி உறவுக்கு இணையானதுதான்.

பொதுவாக சின்ன சின்ன சொற்களைக் கோர்த்து எழுதும் வாலி நடிகர்களுக்கு ஏற்ப மட்டுமல்ல எஸ்.பி.பிக்கும் ஏற்ற சொற்களை உருவாக்கியதில் அற்புதங்களை செய்துள்ளார்.

தமிழ்த் திரைப்படப் பாடலில் புதுக்கவிதையை இடம் பெயர்த்து தனக்கென தனி பாணி அமைத்துக் கொண்ட கவிஞர் வைரமுத்துவின் பாடல்களும் எஸ்.பி.பியின் பொன் மகுடத்தில் வைரங்களாகவும் முத்துகளாகவும் ஜொலிக்கின்றன

மு.மேத்தா, எம்.ஜி.வல்லபன், கங்கை அமரன், ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலரது பாடல்களும் எஸ்.பி.பியின் குரல் வண்ணத்தால் கொண்டாட்டங்களாக மாறியுள்ளன

தமிழில் பாடல் எழுதிய அனைவருமே தங்களின் ஒருபாடலையாவது எஸ்.பி.பி. பாட வேண்டும் என்று விரும்பியதில் வியப்பில்லை.

எஸ்.பி.பி. விரும்பி பாடியது மகாகவி பாரதியின் பாடல்களை....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments