சுசாந்த் மரணம் தொடர்பான விசாரணை நடைபெறும் நிலையில் புதுத்தகவல்

0 2635
சுசாந்த் மரணம் தொடர்பான விசாரணை நடைபெறும் நிலையில் புதுத்தகவல்

இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என  எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் கூறியதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சுசாந்த் சிங்கின் குடும்ப வழக்கறிஞரான விகாஷ் சிங், சுசாந்த் மரணத்தை தொடர்ந்து  சடலத்தின் புகைப்படத்தை எய்ம்ஸ் மருத்துவருக்கு அனுப்பி வைத்ததாகவும், அதை ஆய்வு செய்த மருத்துவர், 200 சதவீதம் உறுதியாக சுசாந்த் தற்கொலை செய்யவில்லை என கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

சுசாந்த் விவகாரத்தை தற்கொலை என்ற கோணத்தில் இருந்து கொலை என்ற கோணத்துக்கு சிபிஐ மாற்றாமல் இருப்பதாகவும், சிபிஐயின் இந்த தாமதம் விரக்தியை அளிக்கிறது என்றும் விகாஷ் சிங் கூறியுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments