திரைத்துறையில் எம்.ஜி.ஆர் , சிவாஜி முதல் அனைவருக்கும் பொருந்திய எஸ்.பி.பி.யின் குரல்

0 4175
திரைத்துறையில் எம்.ஜி.ஆர் , சிவாஜி முதல் அனைவருக்கும் பொருந்திய எஸ்.பி.பி.யின் குரல்

ஒருவர் பேசும் குரலையும் பாடும் குரலையும் வேறுபடுத்தியது சினிமா.

அந்தக் காலத்தில் நடிகர்களே தங்கள் பாடல்களுக்கு குரல் அசைத்தனர். கலைவாணர் என்.எஸ்.கே. , தியாகராஜ பாகவதர் உள்பட பலரும் அப்படித்தான் புகழ் பெற்றனர்.

ஆனால் வேறு குரல்கள் பின்னணியில் ஒலிக்கத் தொடங்கிய போது பல குரல்கள் இனிமையாக இருந்த போதும் நடிகர்களுக்குப் பொருந்தாமலேயே இருந்தன.

எம்.ஜி.ஆர். சிவாஜியின் பின்னணி திரைக்குரலாக ஒலித்த டி.எம்.எஸ். குரலைப் போல ரஜினிக்கும் கமலுக்கும் எஸ்.பி.பியின் குரல் அற்புதமாகப் பொருந்திப் போனது.

இரண்டு பெரிய நடிகர்களுக்கும் தனித்தனி குரலாக வித்தியாசம் காட்டினார் எஸ்.பி.பி.

மேடையில் மைக்கைப் பிடித்து மோகன் பாடிய பல பாடல்கள் அவரே பாடியது போல கற்பனையை உருவாக்கியதில் எஸ்.பி.பியின் பங்கு முக்கியமானது.

விஜயகாந்த், சத்யராஜ்,பிரபு, கார்த்திக்,  உள்பட எத்தனையே நடிகர்களுக்கு எஸ்.பி.பியின் குரல் இல்லாத பாடல்களை யாராலும் கற்பனைக்கூட செய்ய முடியாது. அத்தனை சிறந்த பாடல்கள் எஸ்.பி.பியின் வரலாற்றை கட்டியம் கூறுகின்றன

எம்ஜி ஆர் தொடங்கி சத்யராஜ், விஜயகாந்த், டி.ராஜேந்தர் படங்கள் வரை தான் டி.எம்.எஸ் பாடினார்.

எஸ்.பி.பி. அதையும் கடந்து வந்து நேற்று அறிமுகமான புதிய நாயகன் வரை பலருக்கும் பாடி புதிய சாதனை படைத்துள்ளார். அந்த குரல் எம்ஜிஆர் முதல் அப்பாஸ் வரை யாருக்கும் பொருந்தியதுதான் அதிசயம்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments