சங்கராபரணம் முதல் சாஜன் வரை.... தென்னாடு மட்டுமல்ல அவரோட பாட்டுக்கு வடநாடும் அடிமை!
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மாயக்குரலுக்கு தென்னிந்தியா மட்டுமல்ல வட இந்தியாவும் அடிமைதான். இந்தியாவிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பல ஹிந்தி பாடல்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தால் பாடப்பட்டவை என்பது பலரும் அறிந்திடாத விஷயம்.
கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘சங்கராபரணம்’ என்ற தெலுங்கு திரைப்படம் தான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம். கடந்த 1980 - ம் ஆண்டு, முழுக்க முழுக்க இசையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 10 பாடல்களில் 9 பாடல்களை எஸ்.பி.பி தான் பாடியிருந்தார். கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்காமல், இந்தப் படத்தில் சிறப்பாக பாடியிருந்தது எஸ்.பி.பிக்கு பெரும் புகழைச் சேர்த்தது. இந்தப் படத்தில்தான் எஸ்.பி.பி முதன் முதலில் தேசிய விருதைப் பெற்றார். இந்த பாட்டுக்காக தான் எவ்வளவு கஸ்டப்பட்டு பாடல்களை படித்தேன் என்பதை எஸ்.பி.பி.யே ஒரு முறை விளக்கியது போது , ரசிகர்கள் பிரமித்து போனார்கள்.
ஆனால், அடுத்த வருடமே பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார் எஸ்.பி பாலசுப்ரமணியம். தன் முதல் ஹிந்தி படத்தில் கமல்ஹாசனுக்காக எஸ்.பி.பி பாடினார். 1981 - ம் ஆண்டு பாலசந்தரின் இயக்கத்தில் லக்ஷ்மிகாந்த் பியாரேலால் இசையில் வெளியான ஏக் துஜே கேலியே திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. ஹம்பனே தும்பன பாடல் இளைஞர்களை ஆட வைத்தது என்றால் தெரே மேரே பீச் மே பாடல் இளவட்டங்களை கிறங்கடித்தது.
அடுத்து 1989 - ஆம் ஆண்டு சல்மான்கான் நடித்த மைனே பியார் கியா படத்தில் எஸ்.பி.பி பாடிய அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தன. தில் தீவானா என்ற பாடல் சூப்பரோ சூப்பர் ஹிட்டானது. அந்த காலக்கட்டத்தில் கோடிக் கணக்கான கேசட்டுகள் விற்பனையாகி மைனே பியார் கியா சாதனை படைத்தது. அடுத்து சாஜன் திரைப் படத்தில் சல்மான்கானுக்காக பல பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. இந்த படத்தில், pehli baar mile hain பாடலை வெஸ்டர்ன் ஸ்டைலில் எஸ்.பி.பி. அசத்தலாக பாடியிருப்பார். அதே படத்தில் bahut pyar karte hain tumko sanam என்ற மெலடி பாடலையும் ரம்மியமாக பாடியிருப்பார். சாஜன் படத்தில் இடம் பெற்ற மற்றோரு பாட்டான thumse milne kitha mannahe பாட்டை மிக வேகமாக பாடி எஸ்.பி.பி மிரள வைத்தார்.
இப்படி, பல ரகங்களில் பாடும் திறமை கொண்ட எஸ்.பி.பி- யை பாலிவுட் இசையமைப்பாளர்கள் ராம் லக்ஷ்மன், நதீம் ஸ்ரவன் தங்கள் படங்களில் தொடர்ந்து பயன்படுத்தினர். 1994- ஆம் ஆண்டு வெளியான ஹம் ஆப் கே ஹைன் கோன் படத்தில் எஸ்.பி. பி பாடிய அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. "Pehla Pehla Pyar hai இந்திய இளைஞர்களை காதல் கனவில் தள்ள வைத்தது என்றால், "Didi Tera Devar Deewana என்ற பாடல் காதலியின் மனதில் இடம் பிடிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தது. பாலிவுட்டை பொறுத்தரை மிக சொற்ப்பமான பாடல்களை எஸ்.பி.பி. பாடியிருக்கிறார்... ஆனால், அந்த மாயக்குரலுக்கு வட இந்தியாவே அடிமையாகி கிடந்தது என்றால் மிகையல்ல!
Comments