காலமானார் எஸ்பிபி..!

0 23412
காலமானார் எஸ்பிபி..!

திரை இசை வானில் கொடி கட்டப்பறந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணையம் காலமானார். அவரது இறுதி சடங்குகள் நாளை சென்னை அருகே நடைபெறுகின்றன.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் முதல் உடல் நிலை பின்னடைவை சந்தித்தது. மருத்துவர்கள் அளித்த சிறப்பான சிகிச்சையால் உடல்நிலை தேறியது. கொரோனா பாதிப்பு நீங்கியதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஆனாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நுரையீரல்கள் மீண்டும் பழைய நிலையை அடையவில்லை என்றும், தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறினர். இதனால் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உடல் நலம் தேறி எழுந்து அமரும் அளவுக்கு எஸ்.பி.பி. நலம் பெற்றதாக மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில் 24 ஆம் தேதி அன்று அவரது உடல் நிலையில் திடீர் பின்னடவை ஏற்பட்டதாகவும், உடல் நிலை மிக, மிக மோசடைந்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த து. இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு முதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் 1 மணி 4 நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்த தாக எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் தெரிவித்தார்.

‛எக்மோ, வெண்டிலேட்டர் உளிட்ட உயிர்காக்கும் கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக உயிர்பிரிந்தது' என எம்ஜிஎம் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு உடல்நிலை தேறி வந்த நிலையில்,எஸ்.பி.பி. காலமானார். அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானவர்கள் திரண்டனர். கூட்டம் அதிகரித்த தை அடுத்து,  எஸ்.பி.பி. உடலை இரவே தாமரைபாக்கம் கொண்டு செல்ல போலீசார் யோசனை தெரிவித்தனர். இதையடுத்து அலங்கார ஊர்தியில் ஏற்றப்பட்ட அவரது உடல், இரவே தாமரைபாக்கம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நாளை  உடல் அடக்கம் நடைபெறும் என்று எஸ்.பி.பி. குடும்பத்தினர் கூறியுள்ளனர். தாமரை பாக்கத்தில் அஞ்சலி செலுத்த மக்களுக்கு அனுமதி இல்லை என்றும், 500 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments