வடகிழக்கு மாநிலங்களில் பாமாயில் பயிரிடுவது பாதிப்பை ஏற்படுத்தும் - சூழலியல் வல்லுநர்கள்
வடகிழக்கு மாநிலங்களில் பாமாயில் மரங்களை பயிரிடுவது பல்லுயிர்ச் சூழல், நிலத்தடி நீர்வளம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என வேளாண் மற்றும் சூழலியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் 37 ஆயிரத்து 176 எக்டேர் பரப்பிலும் பாமாயில் பயிரிடப்பட்டுள்ளது. அதிக நீர்த்தேவையுள்ள இவற்றை தனியாகப் பயிரிடுவதால் நிலத்தடி நீர்வளம் குன்றும் எனவும், அவற்றில் தங்கும் பறவைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பல்லுயிர்ச் சூழல் பாதிக்கப்படும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களின் சூழலில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தனிப்பயிராக இல்லாமல் ஊடுபயிராக பாமாயில் பயிரிடுவதைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் வேளாண் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments