இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடக்கம்
வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் அதிகரித்தன.
ஆசிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழ்நிலை உள்ளிட்டவற்றால் இன்று காலை இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின.
தொடக்க நேர வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 948 புள்ளிகளாக அதிகரித்தன. இதேபோல் தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 121 புள்ளி அதிகரித்து 10 ஆயிரத்து 927ஆக உயர்ந்தது.
மும்பை பங்கு சந்தையில் இன்டஸ்இன்ட் வங்கி, எம் அண்ட் எம், டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், சன் பார்மா, மாருதி, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் மதிப்பு 3.22 சதவீதம் வரை அதிகரித்தது.
Sensex surges 395.08 points to 36,948.68 in opening session; Nifty rises 121.50 points to 10,927.05
— Press Trust of India (@PTI_News) September 25, 2020
Comments