விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது தவறு இல்லை.. 3 பெண்களை விடுதலை செய்தது மும்பை உயர்நீதிமன்றம்

0 6926
விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது தவறு இல்லை.. 3 பெண்களை விடுதலை செய்தது மும்பை உயர்நீதிமன்றம்

விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டத்தின் அடிப்படையில் தவறு இல்லை என்று கூறி 3 பெண்களை விடுதலை செய்து  மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் மூன்று பேரை உத்தரபிரதேசத்தின் பெண்கள் காப்பகத்தில் அடைத்து வைக்க கீழமை நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

இதற்கு எதிராக பெண்களில் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மேஜரான பெண்கள் தாங்கள் விரும்பும் வேலை செய்ய உரிமை உள்ளதாக கூறியுள்ளது.

மேலும் பாலியல் தொழில் தண்டனைக்கு உரிய குற்றம் என்று சட்டம் கூறவில்லை என்றும் பொது இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மற்றும் ஒருவரை மிரட்டியோ, ஏமாற்றியோ அந்த தொழில் செய்வது தான் குற்றம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments