வாகன விற்பனை அளவை அதிகரித்துக் காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கில் BMW நிறுவனத்துக்கு ரூ.132 கோடி அபராதம்
வாகன விற்பனை அளவை அதிகரித்துக் காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கில் பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு அமெரிக்கப் பங்குச்சந்தை ஆணையம் 132 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
2015 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அமெரிக்காவில் அதன் வாகன விற்பனையை உண்மையான அளவை விட அதிகரித்துக் காட்டியதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம் கார் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி முதலீட்டாளர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 765 கோடி ரூபாய் முதலீடு திரட்டியுள்ளது.
இது தொடர்பான வழக்கை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள பிஎம்டபிள்யூ நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும் 132 கோடி ரூபாயை அபராதமாகச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
BMW to pay $18 million U.S. fine to resolve inflated sales probe https://t.co/UFdhFXe781 pic.twitter.com/FLmoTLCBzo
— Reuters (@Reuters) September 25, 2020
Comments