சந்தேகத்தால் மனைவி, மாமியார் கொலை!- திருச்சியில் சம்பவம்!

0 23361
உலகநாதன்

ள்ளத் தொடர்பைத் தட்டிக்கேட்ட, மனைவி மற்றும் மாமியார் வெட்டிக் கொலைசெய்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


திருச்சி பெரிய மிளகு பாறையைச் சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கும் பவித்ராவு என்பவருக்கும் 5  ஆண்டுகளுக்கு முன்  திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு, கனிஷ்கா என்ற இரண்டரை வயது மகள் உள்ளார். பெரம்பலூரில் உள்ள எம்.ஆர்.எஃப் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த உலகநாதன் கொரோனா ஊரடங்கால் வேலையிழந்தார். அதனால், கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே இருந்துள்ளார்.  உலகநாதனின் மனைவி பவித்ரா டி.என்.பி.எஸ்.சி க்காக பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்துள்ளார். ஏற்கெனவே, மனைவி மீது சந்தேகத்தால் உலகநாதன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். 

காலையில் பயிற்சிக்குச் செல்லும் பவித்ரா மாலை தான் வீடு திரும்புவார். இந்த நேரத்தில் வேறு சில பெண்களைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார் உலகநாதன். இந்த விவகாரம் வெளியே தெரியவர அவர்களுக்குள் பிரச்னை பூதாகரமானது.  இந்த நிலையில், நேற்று அதிகாலை உலகநாதன் தன் வீட்டைப் பூட்டிவிட்டு மகளைத் தூக்கிக்கொண்டு சென்றுள்ளார்.

இது குறித்து  உலகநாதனின் தாயார் இந்திராணிக்கு தகவல் கிடைத்தது. வீட்டின் பூட்டை உடைத்துவிட்டு, உள்ளே சென்று பார்க்குமாறு பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர்  உள்ளே சென்று பார்த்த போது உலகநாதனின் மனைவியும், மாமியாரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். உடனே, கன்டோன்மென்ட் காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட, இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இரட்டைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய உலகநாதனின் செல்போன் சிக்னல் கடைசியாகப் பெரம்பலூர் பகுதியை  காட்டியுள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments