இரண்டு மாதங்களுக்குப் பின் இன்று காவிரி ஆணையக் கூட்டம்
காவிரி ஆணையக் கூட்டம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று நடைபெறுகிறது.
தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்கவேண்டிய நீரின் அளவைக் கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம், இருதினங்களுக்கு முன் நடந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடக்க உள்ளது. அக்டோபர் மாத ஒதுக்கீடான 20புள்ளி 22 டி.எம்.சி.யை முறையாக திறக்க இக்கூட்டத்தில், தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மேகதாது அணைக்கு அனுமதி கோரி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமரைச் சந்தித்த நிலையில் இன்று நடைபெறும் காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments