கொரோனா தடுப்பு மருந்து Sputnik V பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது
உலகிலேயே முதன் முறையாக ரஷ்யா தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் -வி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மாஸ்கோவில் உள்ள மருந்துக் கடைகளில் தடுப்பு மருந்து விநியோகம் செய்யப்படுகிறது. முதல்கட்டமாக வயதானவர்கள், முன் களப்பணியாளர்களுக்கு மருந்தை செலுத்த உள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அவசரமாக மருந்தைத் தயாரித்ததாக ரஷ்யா மீது விமர்சனங்கள் எழுந்த போதும், ஸ்புட்னிக் மருந்து பாதுகாப்பானது என்று பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு ரஷ்யா அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து Sputnik V பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது #Russia | #CoronaVaccine | #SputnikV https://t.co/5dHS4733Ac
— Polimer News (@polimernews) September 25, 2020
Comments