மழையின் தீவிரம் குறைந்து இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பும் மும்பை

0 1282

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மழையின் தீவிரம் குறைந்ததால் ரயில், பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பேருந்து, ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நகரின் பல இடங்களிலும் வெள்ளம் வடிந்து விட்டதாலும், மழையின் தீவிரம் குறைந்தது விட்டதாலும், ரயில், பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. உள்ளூர் ரயில்கள் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியதால் மும்பை நகரம் மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments