இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி.. ஆறே நாட்களில் சுமார் ரூ.11 லட்சம் கோடி இழப்பு..!
இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஆறே நாட்களில், சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நகரங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது, மேற்கத்திய நாடுகளின் மோசமான பொருளாதார புள்ளி விவரங்கள் போன்றவை, இந்திய முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பங்குகள் அதிகளவில் விற்கப்படுவதால், இந்திய பங்குச்சந்தை கடந்த 16ம் தேதி முதல் தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 4 லட்சம் கோடி ரூபாயும், ஆறு நாட்களில் 11 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயும் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி.. ஆறே நாட்களில் சுமார் ரூ.11 லட்சம் கோடி இழப்பு..! #India | #IndianShareMarket | #Sensex | #BSE https://t.co/KOgsmxAL4P
— Polimer News (@polimernews) September 25, 2020
Comments