தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1140 கோடி வழங்க வேண்டும்-மத்திய அமைச்சரிடம் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், டெல்லியில் மத்திய அரசு கால்நடை பராமரிப்பு அமைச்சர் மற்றும் துறை செயலரை சந்தித்து, தமிழக கால்நடை பராமரிப்பு துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1140 கோடி ரூபாய் வழங்க கேட்டுக் கொண்டார்.
தலைவாசல், உடுமலை மற்றும் வீரபாண்டியில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி துவங்க மத்திய அரசின் பங்களிப்பான 500 கோடி ரூபாய் வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ள நிலையில் அந்த தொகையை வழங்குமாறு இந்த சந்திப்பில் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
அத்துடன் தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு 209.63 கோடி நிதியுதவியையும் அவர் கோரினார்.
தமது துறை தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கான மத்திய பங்களிப்பை வலியுறுத்திய அவர்,அவை குறித்த முழு விவரங்களை மத்திய அமைச்சரிடம் அளித்தார்.
Comments