பருவ நிலை மாற்றத்தால் எழும் ஆபத்துகள்.. விழிப்புணர்வு ஏற்படுத்த 18 வயது இளம்பெண் நூதன போராட்டம்..!
பருவ நிலை மாற்றத்தால் எழும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக, Mya Rose என்ற 18 வயது இளம்பெண், ஆர்டிக் துருவ பனி மலையில் ஏறி, நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
பூமியின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள இந்தப் பகுதியை 3 வார கடல் பயணம் மூலம் எட்டிய இவர், கையில் பதாகை ஏந்தி, தமது போராட்டத்தின் நோக்கத்தை பதிவு செய்தார்.
தற்போதைய சூழலில் உலகம் மிகப் பெரிய ஆபத்தை எதிர் நோக்கி உள்ளதாக சுட்டிக்காட்டும் இவர், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று அறை கூவல் விடுத்துள்ளார்.
கடும் குளிருக்கு மத்தியிலும் உயிரை பணயம் வைத்து, விழிப் புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள இளம்பெண், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Comments