தமிழகத்திற்கு உபரி நீரை தந்து கர்நாடகம் ஏமாற்றி உள்ளது - காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழக அரசு புகார்
தமிழகத்திற்கு உபரி நீரை தந்து, கர்நாடகா ஏமாற்றியுள்ளதாக காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் முறையிடப்பட்டு உள்ளது.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில், டெல்லியில் நடைபெற்றது. இதில்,காணொலி மூலம் தமிழகத்தின் சார்பில் காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம், நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட, நான்கு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள், நடப்பு ஆண்டுக்கான ஒதுக்கீட்டில், கர்நாடக அரசு, 14 டி.எம்.சி.,க்கு மேல் நிலுவை வைத்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
மேலும் கர்நாடக அணைகள் மழையால் நிரம்பிய போது, அதிலிருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டது என்றும் இந்த நீரை தமிழகத்தின் கணக்கில் சேர்த்து, கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்.
Comments