புல்லட் ரயில் திட்டத்தின் கீழ் ரயில் பாதை அமைக்க 7 நிறுவனங்கள் போட்டா போட்டி

0 2829
புல்லட் ரயில் திட்டத்தின் கீழ் ரயில் பாதை அமைக்க 7 நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளிகளை அளித்துள்ளன.

புல்லட் ரயில் திட்டத்தின் கீழ் ரயில் பாதை அமைக்க 7 நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளிகளை அளித்துள்ளன. 

இதுகுறித்து தேசிய அதிவிரைவு ரயில் கார்ப்பரேஷன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அகமதாபாத் - டெல்லி இடையிலான புல்லட் ரயில் திட்டத்தில் முதற்கட்டமாக வாபி - வதோதரா இடையே ரயில் பாதை அமைக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

237 கிலோ மீட்டர் தூரத்தில் 20,000 கோடி செலவில் அங்கு பாதை அமைப்பதற்காக 7 நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளிகளை அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த திட்டத்தில் 47 சதவிகித தூரத்திற்கு பாதை அமைக்கும் இந்த திட்டத்தில் 4 ரயில் நிலையங்கள் கட்டப்படும் என்றும், 24 ஆறுகள், 30 சாலைகளை கடந்து ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments