நேபாள எல்லையிலும் அத்துமீறிய சீனா : நேபாள மக்கள் போராட்டம்
எல்லையோரத்தில் அத்துமீறி கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள சீனாவுக்கு நேபாளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நேபாள எல்லைப் பகுதியில் உள்ள, ஹம்லா மாவட்டத்தில், சீனா தரப்பில், 11 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த தகவலை தொடர்ந்து, நகராட்சி அதிகாரி விஷ்ணு பகதூர் தமாங் தலைமையிலான குழுவினர், அந்த பகுதிக்கு, கடந்த, 20ம் தேதி சென்று பார்வையிட்டனர்.
அப்போது சீன ராணுவத்தினர்,அதிகாரிகள் குழு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள பகுதி, சீனாவுக்கு சொந்தமானது என வாதாடினர்.
இதற்கிடையே, சீனாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நேபாள மக்கள், போராட்டங்களில் குதித்துள்ளனர். தலைநகர் காத்மாண்டுவில் உள்ள சீன தூதரகத்திற்கு முன் ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments