பிறருக்காக தன்னலம் இன்றி உழைத்தால் தனி சக்தி பிறக்கும் - பிரதமர் மோடி

0 3107
பேராசை இல்லாமல் பிறருக்காக, தன்னலம் இன்றி உழைத்தால் ஒரு போதும் மனச்சோர்வு வராது என்றும், மாறாக தனி சக்தி கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பேராசை இல்லாமல் பிறருக்காக, தன்னலம் இன்றி உழைத்தால் ஒரு போதும் மனச்சோர்வு வராது என்றும், மாறாக தனி சக்தி கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிட் இந்தியா என்ற உடல் தகுதி தேசிய இயக்கம் தொடங்கப்பட்டதன் முதலாம் ஆண்டு தினத்தை ஒட்டி அவர், காணொலி காட்சி மூலம் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, மிலிந்த் சோமன்,ஊட்டச்சத்து நிபுணர் ராஜிவ்தத் திவாகர் உள்ளிட்டோருடன் உரையாடினார்.

அப்போது பேசிய பிரதமர், உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் என்றார். மஞ்சள் உள்ளிட்டவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவர், வாரம் இருமுறை தமது தாயாருடன் பேசுவதாகவும், அப்போதெல்லும் உணவில் மஞ்சள் சேர்க்க மறக்க கூடாது என தாயார் நினைவு படுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் உடனிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments