தமிழ்நாட்டில் இன்று 5692 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்ததால், பலி எண் ணிக்கை 9 ஆயிரத்து 76 ஆக உயர்ந்தது. திருவண்ணாமலையில் 22 வயது இளம் பெண் ஒருவரும், கரூரில் 92 வயது முதியவர் ஒருவரும் கொரோனா வுக்கு உயிரிழந்தனர்.
சென்னையில் புதிதாக ஆயிரத்து 89 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கோவையில் 642 பேருக் கும், செங்கல் பட்டில் 299 பேருக்கும் , திருவள்ளூரில் 265 பேருக்கும், கடலூரில் 250 பேருக்கும், திருப்பூரில் 188 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Comments