கோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு - வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0 1518
வருகிற 28-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை திறக்கப்படவுள்ள நிலையில், வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன.

வருகிற 28-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை திறக்கப்படவுள்ள நிலையில், வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன. 

அதன்படி, சந்தைக்கு வரும் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.

அனைத்து வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். ஆட்டோக்கள், மூன்று சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் சந்தைக்குள் செல்ல தடை, அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி கட்டாயம் வைத்திருக்க வேண்டும், பணியாட்கள், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்,

வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சந்தைக்குள் செல்லும் வழி ஒருவழிப்பாதையாக மாற்றப்படும், சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிக்காக வாரத்தில் ஒரு நாள் காய்கறி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும், மேலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும், சாலையோரத்தில் வியாபாரம் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments