ஜூன் மாதத்தில் 59 லட்சம் வாடிக்கையாளரை இழந்த வோடபோன், ஏர்டெல்
வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் ஜூன் மாதத்தில் 59 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும், ரிலையன்ஸ் ஜியோ 45 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாகப் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் தரவுகளின்படி ஜூன் மாதத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 48 லட்சத்து 20 ஆயிரம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் நிறுவனம் 11 லட்சத்து 30 ஆயிரம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.
அதேநேரத்தில் இவற்றின் போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோ 45 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது. ஜூன் மாத இறுதி நிலவரப்படி செல்பேசி வாடிக்கையாளர்களில் 54 புள்ளி 3 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களையும், 45 புள்ளி 7 விழுக்காட்டினர் ஊர்ப்புறங்களையும் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. நாட்டில் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 69 கோடியே 80 லட்சமாக உயர்ந்துள்ளது.
Dhoondo kamyaabi ke naye raaste. Hello English by @CultureAlley & Idea 4G ke saath seekho English. Apne Idea 4G connection ko karo recharge online, aur IIN pe seekhne ka silsila jari rakho. #Idea4G pic.twitter.com/pJYtlefsxO
— Idea is now Vi™ (@Idea) June 27, 2020
Comments