எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் - சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா திட்டவட்டம்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தை ஒட்டி சார்க் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு காணொலியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 35 ஆண்டுகளாக சார்க் மூலம் பெற்ற நன்மைகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பலனற்று போய் விட்டதாக பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம், தொலைத் தொடர்பு வசதிகளை முடக்குவது, வர்த்தக இடையூறுகள் ஆகியவற்றை சார்க் நாடுகள் முறியடிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
நேபாளம் ஏற்பாடு செய்த இந்த காணொலி மாநாட்டில் பூடான்,இலங்கை ,ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். கொரோனா ஒழிப்பு, வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவையும் விவாதிக்கப்பட்டன.
Comments