ஏழுமலையான் கோயில் 6-ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம் : ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 6-ம் நாளான இன்று சர்வ பூபாள வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமாக 6-ம் நாள் நடைபெறும் தங்க ரத வீதி உலா ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தம் பாட, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.
Sri Malayappa Swamy Hanumantha Vahana Seva pic.twitter.com/GenSkE9LPR
— GoTirupati (@GoTirupati) September 24, 2020
Comments