புதுச்சேரியில் 74 பழங்கால சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்

0 3010

புதுச்சேரி கடற்கரை சாலை அருகே 74 பழங்கால சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.

தமிழக சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வழக்கின் பின்னணியில் கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரி கோலாஸ் நகரை சேர்ந்த மரியா என்ற பெண் கைது செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்து 50 கோடி ரூபாய் மதிப்பிலான 11 சிலைகளும் மீட்கப்பட்டன.

இந்த நிலையில், 4 வருடம் கழித்து வியாழக்கிழமை புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் மரியாவின் தந்தை ராஜரத்தினம் மற்றும் அண்ணன் ஜான் பால் கொண்டப்பா ஆகியோரது வீட்டில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சக்திவேல் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் 64 ஐம்பொன் வெண்கல சிலைகள் மற்றும் 10 கற்சிலைகள் மீட்கப்பட்டன. தொல்லியல் நிபுணர்கள் மூலம் சிலைகளின் காலக்கட்டதை அறிய முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments