இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 6வது நாளாக கடும் வீழ்ச்சியைடைந்ததால், ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1115 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 36 ஆயிரத்து 553ல் நிலை கொண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 326 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 805ல் நிலை பெற்றது. வங்கி, நிதி சேவை, தகவல் தொழில்நுட்பம், உலோகம் உள்ளிட்ட அனைத்து துறை குறியீட்டு எண்களும் சரிவடைந்தன.
ஐரோப்பிய நகரங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது, மேற்கத்திய நாடுகளின் மோசமான பொருளாதார புள்ளி விவரங்கள் போன்றவை முதலீட்டாளர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதால், பீதியில் பங்குகளை விற்று தள்ளியதே இந்த சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
Sensex falls 1,114.8 points, Nifty slips to 10,805.5 pic.twitter.com/BSxdCqzXSn
— ANI (@ANI) September 24, 2020
Comments