உள்நாட்டு விமான பயணிகளின் லக்கேஜ் கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு
உள்நாட்டு விமானப் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு கட்டமாக, பயணிகளின் லக்கேஜ் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு இன்று நீக்கி உள்ளது.
இது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் லக்கேஜ் உச்சரவரம்பிற்கு உட்பட்டு தங்களது பொருட்களை கொண்டு செல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு பயணத்திற்கு பயணிகள் ஒவ்வொருவரும் தலா 15 கிலோ எடை வரை செக்-இன் லக்கேஜுகளை கட்டணம் எதுவும் செலுத்தாமல் எடுத்துச் செல்ல விமான நிறுவனங்கள் அனுமதித்துள்ளன.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக உள்நாட்டு விமான பயணிகள் ஒரே ஒரு செக்-இன் லக்கேஜ் மற்றும் ஒரு கைப்பையை மட்டுமே எடுத்துச் செல்லலாம் என கடந்த மே மாதம் 21 ஆம் தேதி விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு விமான பயணிகளின் லக்கேஜ் கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு | #checkinbaggage https://t.co/3eVYWhjPLI
— Polimer News (@polimernews) September 24, 2020
Comments