ஜேக் மாவை முந்திச் சீனாவின் முதல் பணக்காரர் ஆனார் சோங் சான்சான்
தண்ணீர் பாட்டில் மற்றும் தடுப்பு மருந்து நிறுவனத்தின் அதிபரான சோங் சான்சான், ஜேக் மாவை முந்திச் சீனாவின் பெரும்பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார்.
புதன்கிழமை நிலவரப்படி உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 973 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள சீனாவின் சோங் சான்சான் உலக அளவில் பதினேழாவது இடத்தையும், ஆசிய அளவில் முகேஷ் அம்பானிக்கு அடுத்த இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளார்.
அலிபாபா நிறுவனர் ஜேக் மாவை முந்திச் சீனாவின் பெரும்பணக்காரர் என்னும் பெயரையும் பெற்றுள்ளார். 4 லட்சத்து 19 ஆயிரத்து 187 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள ஜேக் மா சீனாவின் Lone Wolfஇரண்டாவது பணக்காரராக உள்ளார்.
Comments