10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அக்.1 முதல் பள்ளிக்கு வரலாம்
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களும் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 சதவீத ஆசிரியர்களை மட்டும் பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினசரி 50 சதவீத மாணவர்களை சுழற்றி முறையில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், பருவநிலை சரியாக இருந்தால், வகுப்பறைக்கு வெளியே பாடம் நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அக்.1 முதல் பள்ளிக்கு வரலாம் | #SchoolOpenhttps://t.co/YUx9jN3DNO
— Polimer News (@polimernews) September 24, 2020
Comments