அகமதாபாத்தில் தமிழ் வழிப் பள்ளி மூடப்படுவதை கைவிட குஜராத் முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
அகமதாபாத்தில் மூடப்பட்டுள்ள தமிழ் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அகமதாபாத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் வழியில் கல்வி கற்பித்து வந்த பள்ளி, வருகைப் பதிவு குறைந்ததை காரணம் காட்டி திடீரென மூடப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அங்கு வாழும் தமிழ் பிள்ளைகள், தங்கள் படிப்பைக் கைவிடுவதைத் தவிர வேறுவழி இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் குஜராத் முதலமைச்சர் தலையிட்டு, மூடப்பட்ட தமிழ் வழிப் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கான செலவை முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
I request you to intervene in the matter & pass suitable
— ANI (@ANI) September 24, 2020
orders for the continuance of the Tamil medium school in Ahmedabad. Tamil Nadu Government is willing to undertake the entire expenditure for the continuance of this school: Tamil Nadu CM in a letter to Gujarat CM https://t.co/AxkZrxPS8N
Comments