மூக்கு வழியாக செலுத்தக் கூடிய அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசி - இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம்
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகிக்க, அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக் கழகம் தயாரித்துள்ள சிம்ப்-அடினோவைரஸ்’ எனப்படும் இந்த தடுப்பூசி, எபோலா வைரஸ் மற்றும் காசநோய் போன்ற பிற தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகளுக்கு அடிப்படையாக உள்ளது.
விரைவில் இதற்கான முதற் கட்ட மருத்துவ பரிசோதனை நடக்க உள்ள நிலையில், இந்தியாவில் தேவையான ஒழுங்குமுறை ஒப்புதலை பெற்றபின், அடுத்த கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்தவும், உற்பத்தி செய்யவும், பாரத் பயோடெக் நிறுவனம், ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மூக்கு வழியாக செலுத்தக் கூடிய அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசி - இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் #US | #CoronaVaccine https://t.co/Jid8D0RI1C
— Polimer News (@polimernews) September 24, 2020
Comments