டெல்லி கலவரம் தொடர்பாக பேஸ்புக்கிற்கு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு பதிலளிக்க பேஸ்புக் மறுப்பு

0 1087

டெல்லி கலவரம் தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டம் பேச்சுரிமையை அனுமதிப்பது போல பதிலளிக்காமல் மௌனமாக இருப்பதற்கான உரிமையையும் அளிப்பதாக அவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றக் குழுவிடம் சாட்சியளிக்க கட்டாயப்படுத்த முடியாது என்று அஜித் மோகன் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவானவர்கள் மற்றும் எதிரானவர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments