15 மாநில பள்ளிகளில் கை கழுவுதலுக்குக் கூட வசதியில்லாத கழிப்பறை - சிஏஜி அறிக்கை

0 1149
15 மாநில பள்ளிகளில் கை கழுவுதலுக்குக் கூட வசதியில்லாத கழிப்பறை - சிஏஜி அறிக்கை

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் கை கழுவுதலுக்குக் கூட வசதியில்லாத கழிப்பறைகளைக் கொண்ட பள்ளிகள் இருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிஏஜி அமைப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில்,  இலவச மற்றும் கல்விக் கட்டாயச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதற்காக 7 பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் 2 ஆயிரத்து 162 கோடி ரூபாய் செலவில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 703 கழிப்பறைகள் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2 ஆயிரத்து 48 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஏராளமான பள்ளிகளில் கைகளைக் கழுவுதலுக்கு கூட வசதியில்லாத வகையில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments