ரபேல் தொழில்நுட்பங்கள் கிடைக்கவில்லை.. தடைகளை கண்டறிய கோரிக்கை..!

0 12915
ரபேல் விமானம் மற்றும் அதற்கான தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான, பிரான்சு நாட்டுடன் ஆன தொழில்நுட்ப பரிமாற்றம் தற்போது வரை நிலுவையிலேயே உள்ளதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரபேல் விமானம் மற்றும் அதற்கான தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான, பிரான்சு நாட்டுடன் ஆன தொழில்நுட்ப பரிமாற்றம் தற்போது வரை நிலுவையிலேயே உள்ளதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையை வலுவாக்கும் நோக்கில் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 36 ரபேல் விமானங்கள் பிரான்சிடம் இருந்து பெற இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், தளவாட உற்பத்திக்கான தொழில்நுட்பத்தைப் பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது வரை அந்த தொழில்நுட்ப பரிமாற்றம் நிலுவையிலேயே உள்ளதாக, தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் மற்றும் எம்பிடிஏ ஆகிய நிறுவனங்கள் ரஃபேல் விமானம் மற்றும் அதில் பொருத்தும் ஏவுகணை ஆகியவை தொடர்பான உயர்தொழில்நுட்பங்கள், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு இதுவரை வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேபோல், இலகுரக போர் விமானமான தேஜசிற்கான எஞ்ஜினை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான தொழில்நுட்பமும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஃபேல் ஒப்பந்தத்தின்படி, தொழில்நுட்பங்களை பெறுவதில் இந்தியாவிற்கு உரிய பலன் கிடைக்கவில்லை எனவும், அது தொடர்பான கொள்கை மற்றும் அதன் அமலாக்கம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய உயர்தொழில்நுட்பங்களை பெறுவதில் உள்ள தடைகளைக் கண்டறிந்து அரசு உரிய தீர்வு காண வேண்டும் என, மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments